News December 19, 2024

அமித் ஷா வீடியோ.. காங்., எம்பிக்களுக்கு ‘X’ நோட்டீஸ்!

image

பார்லிமென்ட்டில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய வீடியோக்களை பகிர்ந்த காங்கிரஸ் எம்பிக்களுக்கு ‘X’ நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வீடியோக்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதால் அதனை நீக்க உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பேத்கர் குறித்த தனது பேச்சை சிலர் திரித்து வெளியிட்டுள்ளதாக அமித் ஷா விளக்கமளித்திருந்தார்.

Similar News

News April 3, 2026

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிக: விந்தியா

image

திமுகவில் மானம், ரோஷம் உள்ளவர்கள் இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என விந்தியா பேசியுள்ளார். ஐந்து வருட திமுக ஆட்சியில் திமுககாரர்களே கடுப்பாகியுள்ளதாக கூறிய அவர், பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு பத்து சீட்டை திமுக கொடுத்துள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக அதிமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

₹7 கோடி சொத்தை இழந்த உதயநிதி

image

2026 தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ₹20.64 கோடி என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இது 2021-ஐக் காட்டிலும் ₹7 கோடி குறைவாகும். 2021 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ₹27 கோடி என உதயநிதி குறிப்பிட்டிருந்தார். தற்போது ரெட் ஜெயன்ட் CEO-வாக இருக்கும் மகன் இன்பநிதியின் பெயரை தற்போதைய பத்திரத்தில் குறிப்பிடவில்லை.

News April 3, 2026

55 வயது பெண் 25 வயது இளைஞருடன் திருமணம்

image

சீனாவில் 55 வயது பெண் தொழிலதிபர் 25 வயது இளைஞரை 2-வது திருமணம் செய்த நிகழ்வு வைரலாகிறது. அப்பெண்ணுக்கு 2 மகன்களும் உள்ளனர். கார் உள்பட ₹60 கோடி மதிப்பிலான சொத்துகளை அவர் வரதட்சணையாக கொடுத்துள்ளாராம். முன்னதாக, தனது 45-வது வயதில், 25 வயது இளைஞரை திருமணம் செய்த நிலையில், அந்த உறவு முறிந்தது. ஆண்களை நம்பியிருக்க முடியாது, ஆனால் உங்களின் சுயசம்பாத்தியத்தை நம்பி இருக்கலாம் என்பது இவரின் பாலிசியாம்.

error: Content is protected !!