News March 24, 2024
பறக்கும் படையினருடன் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.23) நடைபெற்றது. இதில் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Similar News
News September 6, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
கோவை: ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

கோவை மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Engineering படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு சம்பளம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 27ம் தேதிக்குள், <
News September 5, 2025
பாஜக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: 3 பேர் கைது

கோவை பீளமேடு அருகே பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் அஜய் (36) மீது அரிவாளால் தாக்கிய வழக்கில் நாகராஜ், அஸ்வின், அனிதா ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் மற்றும் புகையிலை பொருள் விற்பனை குறித்த புகாரே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் காயமடைந்த அஜய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தலைமறைவாக உள்ள முருகேசன், அஜய்யின் மனைவி பிரியாவை போலீசார் தேடி வருகின்றனர்.