News December 19, 2024
உணவுத் திருவிழாவை துவங்கி வைக்கும் துணை முதல்வர்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை, வரும் 20ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம்.
Similar News
News August 29, 2025
ஸ்தம்பித்த பெசன்ட் நகர்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பொன்விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், வரும் செப்.8-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News August 29, 2025
சென்னை: ஆட்டோ வேண்டுமா? APPLY NOW

▶️சென்னையில் வசிக்கும் பெண்களுக்கு 3-ம் கட்டமாக இளஞ்சிவப்பு ஆட்டோ பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️ 20 முதல் 45 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ▶️ ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அனுகவும். ▶️கடைசி நாள் செப்.15-ஆகும். (SHARE பண்ணுங்க)
News August 29, 2025
பெசன்ட் நகரில் 5 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பொன்விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. மேலும், வரும் செப்.8-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை பொறுத்து தேவைப்பட்டால் ஆக.29, 31, செப்.1, 7, 8 ஆகிய தேதிகளில் அடையார் உட்கோட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.