News December 19, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 122 ▶குறள்:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
▶பொருள்: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

Similar News

News September 7, 2025

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணிப்பு

image

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(செப்.7) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் தற்போது மழையா கமெண்ட்ல சொல்லுங்க.

News September 7, 2025

இபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்க முடிவு

image

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரை <<17636136>>பெங்களூரு புகழேந்தி<<>> நேரில் சந்தித்தார். பின்னர், பேசிய அவர், EPS-ஐ கட்சியில் இருந்து நாங்கள் நீக்குவோம் என்றார். இதனிடையே, செங்கோட்டையனுக்கு ஆதரவாக சசிகலா, OPS விரைவில் அவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தான் கூறியது போல ஒருங்கிணைப்பு பணி தொடரும் என <<17629802>>செங்கோட்டையன்<<>> திட்டவட்டமாக கூறியிருந்தார்.

News September 7, 2025

அதிமுகவை கூறு போட்ட பாஜக: உதயநிதி

image

சென்னை கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய DCM உதயநிதி ஸ்டாலின் வரும் தேர்தலுக்காக முழுவீச்சில் செயல்பட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும், அதற்கான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சியை குறித்து பேசிய அவர், அதிமுகவை பாஜக கூறு போட்டுவிட்டதாக DCM உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

error: Content is protected !!