News December 19, 2024
ஜனவரி 1 முதல் UCC அமல்: உத்ராகண்ட்

2025 ஜனவரி 1 முதல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக உத்ராகண்ட் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக UCC சட்டத்தை நாங்கள் அமல்படுத்த உள்ளோம் என்றார். திருமணம், விவாகரத்து, சொத்து, பரம்பரை சொத்துகளில் பங்கு போன்றவற்றில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரி விதியை வகுக்க UCC சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
Similar News
News September 7, 2025
அதிரடி நீக்கம்.. இபிஎஸ்-ன் புதிய திட்டம்

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரம் என எதிர் அணியினர் சாடினாலும், ஜெயலலிதா மாதிரி தைரியமான முடிவு என EPS-ன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். BJP சார்பில் அழுத்தம் கொடுத்தாலும் மீண்டும் ஒன்றிணைப்பு இல்லை என உறுதியாக உள்ளாராம். பொதுச்செயலாளர் வழக்கில் MHC சாதகமான தீர்ப்பு, BJP ஓவராக அழுத்தம் கொடுத்தால் அவர்களை விட்டுவிட்டு TVK-வுடன் கூட்டணி வைக்கலாமா எனவும் ஆலோசித்ததாக பேசப்படுகிறது.
News September 7, 2025
தமிழர்களின் கவனிப்பு: CM ஸ்டாலின் எமோஷனல்

முதலீடுகளை ஈர்க்க CM ஸ்டாலின் மேற்கொண்ட ஜெர்மனி & UK பயணம் நிறைவடைந்தது. இப்பயணத்தின் போது வெளிநாடு வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பை பற்றி குறிப்பிட்ட அவர், இத்தனை நாளும் தன்னை சகோதரனாய் எண்ணி கவனித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அளவில்லா அன்பு பொழிந்த தமிழ் மக்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
News September 7, 2025
வீட்டு மின் இணைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, கோர்ட் தீர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு காத்திருப்போருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.