News December 19, 2024
‘நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்’

கோவை சத்தி சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் பேசுகையில், நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். இது பல சங்கிகளை கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன என்றார்.
Similar News
News March 11, 2026
கோவை நகர் முழுவதும் போலீஸ் அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று காவல்துறையினர் (ம) அதிவிரைவுப் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக விரோத செயல்களை தடுக்கவும் உதவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.