News December 19, 2024
அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை: உதயநிதி ஸ்டாலின்

அரசியலமைப்புக்கு எதிராக பேசிய நீதிபதியை பதவியை விட்டு நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் துணிச்சல் கூட அதிமுகவுக்கு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவையில் நிகழ்வொன்றில் பேசிய அவர், “பாஜக கொண்ட வந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கும் அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட அதிமுகவை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புவது எனக்கு கவலை அளிக்கிறது” என்றார்.
Similar News
News March 12, 2026
நடிகர் ஹரி முரளி தற்கொலை.. சோகமான தகவல்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட <<19362357>>இளம் நடிகர் ஹரி முரளி(27)<<>>, தற்கொலை செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விபரீத முடிவுக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஹரி முரளி இளம் வயதிலேயே தற்கொலை முடிவை எடுத்திருப்பது பெரும் சோகம்.
News March 12, 2026
திருட்டு என்ஜின் தான் திமுக அரசு: TTV

PM மோடி கூறிய டபுள் இன்ஜின் அரசை டப்பா இன்ஜின் என விமர்சித்திருந்த CM ஸ்டாலின், தமிழகத்தில் அது எடுபடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு மத்திய அரசு உதவும் என்பதை தான் டபுள் இன்ஜின் அரசு என PM மோடி குறிப்பிட்டதாக TTV விளக்கியுள்ளார். மேலும், திமுக அரசை திருட்டு ரயில் இன்ஜின்; வித் அவுட் டிக்கெட் இன்ஜின் என்று அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

இந்தியாவில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதால், உள்நாட்டு LPG உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மூன்றே நாள்களில் 10%-ல் இருந்து 25% ஆக LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபடவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளது. SHARE IT


