News December 19, 2024

ரஜினி பெரிய நடிகர்னு எனக்கு தெரியாது: நயன்தாரா

image

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சந்திரமுகி பட அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், சந்திரமுகி படத்தில் எனது முதல் காட்சி ரஜினி சாருடன் இருந்தது. அப்போது அவர் அவ்வளவு பெரிய நடிகர்னு எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு ப்ளஸ் ஆக மாறியது. ஒருவேளை எனக்கு தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஸ்டார் வேல்யு தெரியாதது எனக்கு உதவியாக இருந்தது எனக் கூறினார்.

Similar News

News March 8, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA

image

அதிமுக முன்னாள் MLA இளையக்கண்ணு திமுகவில் இணைந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஏற்காடு சட்டமன்ற தொகுதி MLA-வாக பதவி வகித்த இளையக்கண்ணு, அதிமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். EPS மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

News March 8, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!