News December 18, 2024
வடகொரியாவுடன் உறவை புதுப்பித்த இந்தியா

நீண்ட இடைவெளிக்குப் பின் வடகொரியா உடனான தூதரக உறவை இந்தியா தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அணு ஆயுதம், அதி நவீன ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இத்தகைய டெக்னாலஜிகள் பாக். செல்வதை தடுக்க, இந்தியா வேலையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News July 5, 2025
AI செய்த மேஜிக்: 18 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான பெண்!

கொலம்பியா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. IVF சிகிச்சையும் பலனளிக்காமல் போக, அவர்கள் கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தை அணுகினார். அங்கு AI உதவியுடன் ஆண்களின் மறைந்திருக்கும் விந்தணுக்களை அடையாளம் காணும் முறையில் சிகிச்சை அளிக்கப்பட, தற்போது அவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர். AI மனித இனத்திற்கே பிரச்னை எனக் கூறப்படும் நிலையில், இது போன்ற செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.
News July 5, 2025
அஜித் குமார் மரணம்… ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், 2 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்த கொடூரத்திற்கு காரணமானவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
News July 5, 2025
இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?