News December 18, 2024
குவைத் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, வரும் 21, 22ஆம் தேதிகளில் அரசுமுறை பயணமாக குவைத் செல்ல உள்ளார். அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சென்றார்.
Similar News
News July 5, 2025
சஞ்சு சாம்சனுக்கு டிமாண்ட்? KCL ஏலத்தில் அதிர்ச்சி

கேரளா கிரிக்கெட் லீக் சீசன் 2, ஆக.21 – செப்.6 வரை நடைபெறவுள்ளது. 6 அணிகள் இந்த டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், இதற்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், சஞ்சு சாம்சனை ₹26.8 லட்சத்துக்கு கொச்சி புளூ டைகர்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆனால் இந்த ஏலத்தில் ஒரு அணி ₹50 லட்சம் மட்டுமே செலவிட முடியும். இதன் மூலம் பாதிக்கு மேலான ஏல செலவினத் தொகையில் சஞ்சு எடுக்கப்பட்டுள்ளார்.
News July 5, 2025
மயக்கமடைந்த ஏர் இந்தியா பைலட்: பதறிய பயணிகள்!

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா- AI2414 விமானத்தின் பைலட் திடீரென மயக்கமடைந்ததால், பதற்றம் ஏற்பட்டது. பைலட் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். பைலட் இல்லாததையடுத்து Co-pilot விமானத்தை இயக்கினார். இந்த பதற்றத்தின் காரணமாக, விமானம் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
News July 5, 2025
பரிதாபமான நிலையில் திமுக: இபிஎஸ்

வீடு வீடாக போய் உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு திமுக பரிதாபமான நிலைக்கு போய்விட்டது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு கட்சியில் சேர வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், திமுகவில் சேருங்கள் என வீடு வீடாக போய் கேட்கும் அளவுக்கு திமுக வந்துவிட்டது. இதுவே அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி தான் என்று தெரிவித்தார்.