News December 18, 2024
திமுக மூழ்கும் கப்பல்: H.ராஜா

DMK வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என BJP மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்தால், எலிகள் அங்கிருந்து குதித்து தப்பித்துக் கொள்ளும் என்ற அவர், அதற்காக திருமாவளவனையும், வேல்முருகனையும் எலிகள் என்று தான் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி இருந்த இடம் தெரியாமல் போகும் எனவும், பாஜக அணியே ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News March 26, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு!

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹13,670 ஆனது. 8 கிராம் கொண்ட சவரன் ₹560 உயர்ந்து ₹1,09,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை <<19478397>>1 அவுன்ஸ் 50 டாலர்கள்<<>> வரை குறைந்துள்ள போதிலும், நம்மூர் சந்தையில் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 26, 2026
கொமதேக போட்டியிடும் தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொமதேக) திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி திருச்செங்கோட்டில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் திருச்செங்கோடு தொகுதியில் MLA ஈஸ்வரன் களமிறங்க உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. TNElection2026
News March 26, 2026
பாகிஸ்தான் ஒரு ‘தரகர் நாடு’: ஜெய்சங்கர்

ஈரான்-USA இடையே சமரசம் செய்யும் பாகிஸ்தானை ‘தரகர் நாடு’ என ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா 2 நாட்டிற்கிடையே நடக்கும் விஷயத்தில் தலையிடாது; USA தனது தேவைகளுக்கு PAK-ஐ பயன்படுத்துவது புதிதல்ல எனவும் கூறியுள்ளார். ஈரான் போரை நிறுத்தும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டதாக காங்கிரஸ் உள்பட பலர் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஜெய்சங்கர் இப்படி பதிலளித்துள்ளார்.


