News December 18, 2024
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ் பி வருண் குமார் உத்தரவிட்டார்.
Similar News
News May 7, 2025
திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.
News May 7, 2025
திருச்சி: கால்நடைகள் மூலம் ரூ.23 லட்சம் வருவாய்

திருச்சி மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 முதல் 28.04.2025 வரை 767 கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.19,88,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.3.45 லட்சம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் மாநகராட்சிக்கு ரூ.23,33,500 வருவாய் கிடைத்துள்ளது.
News May 7, 2025
திருச்சி: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!