News December 18, 2024
வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் மோசடி: POLICE எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று(டிச.,18) வெளியிட்ட விழிப்புணர்வு செய்தியில், இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் ஆப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இதுபோன்ற கோப்புகளை(APK File) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்குகளை பயன்படுத்தி கொள்வர். எனவே கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
News November 12, 2025
சமூக நல துறையின் செயல்பாடுகள் ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.12) தேதி சமூக நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், நிலுவை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் சமூக நலன் அலுவலர் பால சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
ராணிப்பேட்டை: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


