News December 18, 2024
இந்தியா ஆஸ்திரேலியா போட்டி டிரா

BGT தொடரின் மூன்றாவது போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா மோசமாக விளையாடி 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்ய, 275 என்ற இலக்கோடு இந்தியா களம் இறங்கியது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது.
Similar News
News September 2, 2025
உடலை பாதிக்கும் Tooth Brush.. உடனே மாத்திடுங்க

பற்களை சுத்தமாக வைக்க தினமும் பிரெஷ் செய்தால் மட்டும் போதாது, அந்த பிரெஷ் சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதும் அவசியம். டூத் பிரஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். பழைய பிரெஷ்ஷில் பாக்டீரியா, பூஞ்சைகள் இருப்பதால் அது உடலை பாதிக்கலாம். சில சமயங்களில் 3 மாதங்கள் ஆகவில்லை என்றாலும், நீங்கள் நோய் வாய்ப்பட்டு குணமாகும் போது பிரெஷை மாற்றுவது அவசியம். SHARE.
News September 2, 2025
அரசியல் ஆசை குறித்து மனம் திறந்த கிச்சா சுதீப்

தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப், தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள் என்றும், ஆனால் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் உறுதியாக கூறியுள்ளார். அதேசமயம், அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
News September 2, 2025
BREAKING: ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்!

ஆஸி. இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்(35) T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 65 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 79 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஆஸி. அணிக்காக அதிக T20 விக்கெட்களை வீழ்த்திய பெருமையயும் ஸ்டார்க்கையே சேரும். வரும் 2027 உலக கோப்பை ODI & டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.