News December 18, 2024

போக்சோவில் திருப்பைஞ்சீலி வாலிபர் கைது

image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை போக்ஸோ வழக்கின் கீழ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News May 7, 2025

திருச்சி: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

News May 7, 2025

பாலக்காடு – திருச்சி ரயில் ரத்து

image

பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி தினசரி ரயில் மே.2ஆம் தேதி குளித்தலை – திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் குளித்தலை – திருச்சி இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

திருச்சி ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

error: Content is protected !!