News March 23, 2024

திருவள்ளூரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டவர். மிகவும் துடிப்பாக செயல்படக்கூடியவர் என்ற நற்பெயர் பெற்றுள்ளார்.

Similar News

News August 24, 2025

தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தனியார் பேருந்தில் சோதனை செய்த போது 12 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

News August 24, 2025

திருவள்ளூர்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

image

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, மின் துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் குறைகளை மனுவாக நேரடியாக தெரிவித்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!