News December 18, 2024
ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது ‘Laapataa Ladies’

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது ‘லாப்பட்டா லேடீஸ்’ திரைப்படம். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த Laapataa Ladies இறுதிப் பட்டியலில் உள்ள 4 படங்களில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் குழந்தை தொழிலாளர்களைப் பயப்படுத்தி எடுக்கப்பட்ட அனுஜா (Anuja) குறும்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Similar News
News May 8, 2025
கேது பெயர்ச்சி: பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்

மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.
News May 8, 2025
பஞ்சாப் அணி பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
News May 8, 2025
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.