News December 18, 2024
ரசிகர்களை தேடி வருகிறது: அட்லீ

மிகச்சிறந்த அறிவிப்புகள் சினிமா ரசிகர்களை தேடி வந்துகொண்டிருப்பதாக, இயக்குநர் அட்லீ கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், “இன்னும் சில வாரங்களில் என்னுடைய புதிய படம் தொடங்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை என்றாலும் எங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களும் தேவை. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கியுள்ள பேபி ஜான் படம் டிச.25இல் ரிலீஸாகிறது.
Similar News
News September 6, 2025
குறையும் பிறப்பு விகிதம்… தமிழகத்துக்கு வார்னிங்!

நாட்டிலேயே தமிழகத்தில் தான் குழந்தை பிறப்பு விகிதம்(CBR) மிகக் குறைவாக உள்ளதாக CSR அறிக்கை தெரிவிக்கிறது. 1000 பேருக்கு 12 என்ற அளவிலேயே தமிழகத்தில் CBR இருக்கையில், தேசிய அளவில் இது 18.4 ஆகவுள்ளது. மேலும், <<15668950>>மொத்த கருவுறுதல் விகிதமும்<<>> (TFR) தமிழகத்தில் 1.3 ஆகவுள்ளது. ஆனால், TFR குறைந்தது 2.1 ஆக இருந்தால் தான் மக்கள்தொகை சரியாமல் இருக்கும். TN மக்கள்தொகை குறைவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
News September 6, 2025
SIIMA 2025: விருதுகளை குவித்த படங்கள் க்ளிக்ஸ்

தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் SIIMA விருதுகள் விழா செப்.5&6-ல் துபாயில் நடைபெற்றது. தெலுங்கில், புஷ்பா-2 படத்திற்காக மொத்தம் 4 விருதுகளும், கல்கி படத்திற்கு மொத்தம் 4 விருதுகளும் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் கல்கி படத்திற்காக சிறந்த வில்லன் விருதை பெற்றிருக்கிறார். விருதுகளை வாங்கியவர்களின் பட்டியலை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க.
News September 6, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.6) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,120 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,005-க்கும், சவரன் ₹80,040-க்கும் விற்பனையாகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.