News December 18, 2024
செஸ் என்றால் தமிழ்நாடுதான்: விஸ்வநாதன் ஆனந்த்

“செஸ்” என்றால் அது தமிழ்நாடு தான் என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர், இங்கிருந்துதான் முதல் சர்வதேச சாம்பியன், கிராண்ட் மாஸ்டர், வேர்ல்டு சாம்பியன் போன்ற பலர் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், திறமையான வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்வதாகவும் அவர் கூறினார்.
Similar News
News September 6, 2025
ஜெயலலிதாவின் தொகுதியில் கால் பதிக்கும் விஜய்

தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து N.ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கெனவே 2 மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள போதிலும், தேர்தல் பரப்புரை களத்தில், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம்(2011-ல்) தொகுதியில் முதல் முறையாக விஜய் கால் பதிக்க உள்ளார்.
News September 6, 2025
மோசமான பட்டியலில் இருந்து தப்பினாரா முருகதாஸ்?

இந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு மிகவும் மோசமானதாகவே அமைந்தது. ஷங்கர், மணிரத்னம், லோகேஷ் என அனைவரும் சறுக்கினர். இந்த லிஸ்ட்டில் நாமும் இணைந்துவிடக் கூடாது என ‘மதராஸி’ பட புரமோஷனில் AR முருகதாஸ் உள்பட படக்குழுவே அதிகமாக ஹைப் ஏற்றாமல் இருந்தது. இந்நிலையில், இப்படம் ரிலீஸாகி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெறுவதால் ARM தப்பித்ததாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்தாச்சா?
News September 6, 2025
BREAKING: இந்தியா – அமெரிக்கா மீண்டும் நெருக்கம்

மோடி மிகச்சிறந்த பிரதமர் என்றும், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உடனான உறவு குறித்து சாதகமான மனநிலையை வெளிப்படுத்திய டிரம்பை பாராட்டுவதாக மோடி தெரிவித்துள்ளார். டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும் USA-வுடன் சாதகமான உறவை தொடர விரும்புவதாகவும் மோடி கூறியுள்ளார். இதனால், இருநாடுகளிடையே மீண்டும் நெருக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.