News December 18, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 121 ▶குறள்:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
▶பொருள்: அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

Similar News

News September 6, 2025

மோடியின் அமெரிக்க பயணம் ரத்து

image

நியூயார்க்கில், இம்மாத இறுதியில் நடைபெறும் ஐநாவின் பொதுசபை கூட்டத்தில், PM மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அந்த பயணம் ரத்தாவதாக சமீபத்தில் செய்தி வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சாளர்கள் பட்டியலில், மோடியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என தெரிகிறது. பயணம் ரத்தானதற்கு டிரம்ப்பின் வரி விதிப்பும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

News September 6, 2025

சிலிண்டர் சீக்கிரமா காலியாகிறதா?

image

◆அரிசி, பருப்பு, சுண்டல் போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும் ◆சின்ன வளைவான பாத்திரங்களை பயன்படுத்தினால், தீ வேகமாக பரவி சமையல் சீக்கிரம் முடியும் ◆பர்னர் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள் ◆பாத்திரங்களை கழுவியவுடன், ஈரத்தோட அடுப்பில் வைக்காதீர்கள் ◆பிரிட்ஜில் இருந்து எடுத்த காய்கறிகளை சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டு உபயோகப்படுத்தவும். SHARE IT.

News September 6, 2025

குறையும் பிறப்பு விகிதம்… தமிழகத்துக்கு வார்னிங்!

image

நாட்டிலேயே தமிழகத்தில் தான் குழந்தை பிறப்பு விகிதம்(CBR) மிகக் குறைவாக உள்ளதாக CSR அறிக்கை தெரிவிக்கிறது. 1000 பேருக்கு 12 என்ற அளவிலேயே தமிழகத்தில் CBR இருக்கையில், தேசிய அளவில் இது 18.4 ஆகவுள்ளது. மேலும், <<15668950>>மொத்த கருவுறுதல் விகிதமும்<<>> (TFR) தமிழகத்தில் 1.3 ஆகவுள்ளது. ஆனால், TFR குறைந்தது 2.1 ஆக இருந்தால் தான் மக்கள்தொகை சரியாமல் இருக்கும். TN மக்கள்தொகை குறைவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

error: Content is protected !!