News December 18, 2024
”அழுகிய முட்டை அமைச்சர்” என விமர்சித்த அண்ணாமலை

குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது என, தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். குமரி மாவட்டத்தில், அழுகிய முட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு விநியோகத்த சம்பவத்தை சுட்டிக்காட்டி Xஇல் பதிவிட்டுள்ள அவர், உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடுவதை, “அழுகிய முட்டை அமைச்சர்” கீதா ஜீவன் உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News September 6, 2025
BREAKING: இந்தியா – அமெரிக்கா மீண்டும் நெருக்கம்

மோடி மிகச்சிறந்த பிரதமர் என்றும், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உடனான உறவு குறித்து சாதகமான மனநிலையை வெளிப்படுத்திய டிரம்பை பாராட்டுவதாக மோடி தெரிவித்துள்ளார். டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும் USA-வுடன் சாதகமான உறவை தொடர விரும்புவதாகவும் மோடி கூறியுள்ளார். இதனால், இருநாடுகளிடையே மீண்டும் நெருக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை?

தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து EPS ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில், இன்று காலை <<17627735>>மூத்த தலைவர்களுடன்<<>> அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். மேலும், மற்ற தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளாராம்.
News September 6, 2025
மோடியின் அமெரிக்க பயணம் ரத்து

நியூயார்க்கில், இம்மாத இறுதியில் நடைபெறும் ஐநாவின் பொதுசபை கூட்டத்தில், PM மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அந்த பயணம் ரத்தாவதாக சமீபத்தில் செய்தி வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சாளர்கள் பட்டியலில், மோடியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என தெரிகிறது. பயணம் ரத்தானதற்கு டிரம்ப்பின் வரி விதிப்பும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.