News December 17, 2024
தமிழகத்தில் CHESS ACADEMY: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ‘HOME OF CHESS’ அகாடமி உருவாக்கப்படும் என்றும், இதன் மூலமாக லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், விமர்சனங்களை தாங்கும் இயல்பே குகேஷின் வெற்றிக்கு காரணம் என்றும் ஸ்டாலின் பாராட்டினார்.
Similar News
News September 6, 2025
சனிக்கிழமையில் அனுமனை இப்படி வழிபடுங்கள்

அனுமனுக்கு மிகவும் உகந்த தினமான சனிக்கிழமையில் அவரின் முழு அருள் பெற, சில வழிபாட்டு முறைகள் உள்ளது. வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று மனதார பிரார்த்தியுங்கள். மேலும், 27 வெற்றிலையை மாலையாக கோர்த்து அதனை அனுமனுக்கு அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அவரிடம் வையுங்கள். உங்களுக்கான நல்வழியை அனுமன் காட்டுவார். ஜெய் அனுமன்! SHARE IT.
News September 6, 2025
சம்பளத்துடன் கூடிய விடுமுறை.. ஐகோர்ட் புதிய உத்தரவு

3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என HC கூறியுள்ளது. உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் உதவியாளராக பணியாற்றும் ரஞ்சிதா கோரிய 3-வது பிரசவத்திற்கான மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த HC, குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு இது ஆதரவாகவே இருக்கும் என கூறி, விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
News September 6, 2025
அலிஷாவை கட்சி கவனிக்கிறது: அண்ணாமலை

TN BJP புதிய நிர்வாகிகள் பட்டியலில், தனது பெயர் இல்லாததால், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அலிஷா கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் பொறுப்பு கொடுப்பார்கள், கட்சி அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.