News December 17, 2024

முட்டை கொள்முதலில் அரசுக்கு ₹152 கோடி நஷ்டமா?

image

2025ஆம் ஆண்டிற்கான முட்டை கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டுக்கு 94 கோடி முட்டைகள்தான் தேவை என்ற நிலையில், தேவைக்கு அதிகமாக கூடுதல் விலைக்கு 25 கோடி முட்டைகளை வாங்க இருப்பதால், அரசுக்கு ₹152 கோடி நஷ்டம் ஏற்படுமென தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கிய ஒரு தனியார் நிறுவனத்துக்குத்தான் இம்முறையும் டெண்டர் தரப்பட்டதாக கூறப்படுகிறது.

Similar News

News September 6, 2025

நேற்று செங்கோட்டையன்; இன்று அடுத்த தலைவர்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என EPS-க்கு, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இந்நிலையில், காலை 10.30 மணிக்கு, டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார். மதுரையில் மூக்கையா தேவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது. NDA கூட்டணியிலிருந்து விலகியது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளார்.

News September 6, 2025

முதுகு வலியை விரட்டும் யோகா!

image

➤சப்பளங்கால் உட்கார்ந்து, பின்னால் சாய்ந்து படுக்க வேண்டும்.
➤மூச்சை வெளிவிட்டு முதுகை வளைத்து மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும்.
➤கைகளை பின்னால் நீட்டி, பிறகு தலையின் பின்னால் மடக்கி அரைநிமிடம் இருக்க வேண்டும்.
➤இதேபோல் கால்களை மாற்றி செய்ய வேண்டும்
➤பலன்: மார்பு நன்றாக விரிவடைகிறது. முதுகு தண்டு வலுவடையும். SHARE IT.

News September 6, 2025

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை: நயினார் விளக்கம்

image

நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதால், பாஜகவில் வாரிசு அரசியல் என திமுகவினர் விமர்சித்து வந்தனர். ஆனால், தான் பாஜகவுக்கு வருவதற்கு முன்பே கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பாலாஜி இருந்தார் என்றும், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் நயினார் விளக்கம் அளித்துள்ளார். 1989-ல் அதிமுகவில் இணைந்த அவர், ஜெ., மறைவுக்கு பிறகு 2017-ல் BJP-ல் இணைந்தார்.

error: Content is protected !!