News December 17, 2024
கர்ப்பிணிகள் விவரம்: தனியார் ஹாஸ்பிடல்களுக்கு உத்தரவு

கர்ப்பிணிகள் விவரங்களை பிக்மி தளத்தில் பதிவேற்றம் செய்யும்படி தனியார் ஹாஸ்பிடல்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிந்தைய ரத்தக் கசிவு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்டவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுத்து, போதிய சிகிச்சை அளிக்கும் வகையில் PICME தளத்தில் (கர்ப்பிணி பதிவு தளத்தில்) கர்ப்பிணிகள் விவரங்களை பதிவேற்ற பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை: நயினார் விளக்கம்

நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதால், பாஜகவில் வாரிசு அரசியல் என திமுகவினர் விமர்சித்து வந்தனர். ஆனால், தான் பாஜகவுக்கு வருவதற்கு முன்பே கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பாலாஜி இருந்தார் என்றும், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் நயினார் விளக்கம் அளித்துள்ளார். 1989-ல் அதிமுகவில் இணைந்த அவர், ஜெ., மறைவுக்கு பிறகு 2017-ல் BJP-ல் இணைந்தார்.
News September 6, 2025
சனிக்கிழமையில் அனுமனை இப்படி வழிபடுங்கள்

அனுமனுக்கு மிகவும் உகந்த தினமான சனிக்கிழமையில் அவரின் முழு அருள் பெற, சில வழிபாட்டு முறைகள் உள்ளது. வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று மனதார பிரார்த்தியுங்கள். மேலும், 27 வெற்றிலையை மாலையாக கோர்த்து அதனை அனுமனுக்கு அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அவரிடம் வையுங்கள். உங்களுக்கான நல்வழியை அனுமன் காட்டுவார். ஜெய் அனுமன்! SHARE IT.
News September 6, 2025
சம்பளத்துடன் கூடிய விடுமுறை.. ஐகோர்ட் புதிய உத்தரவு

3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என HC கூறியுள்ளது. உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் உதவியாளராக பணியாற்றும் ரஞ்சிதா கோரிய 3-வது பிரசவத்திற்கான மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த HC, குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு இது ஆதரவாகவே இருக்கும் என கூறி, விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.