News December 17, 2024
குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இதில் அனைத்து போட்டி தேர்வர்களும் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும், இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
திருச்சி: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
News May 7, 2025
திருச்சி சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் விபத்தில் மரணம்

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் பூமாலை (53). இவர் கடந்த ஏப்.29 தனது டூவீலரில் துறையூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பூமாலை டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பூமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News May 7, 2025
திருச்சியில் நூதன முறையில் கள்ளநோட்டு விநியோகம்

திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.