News December 17, 2024

ரஷ்யாவின் முக்கிய ராணுவ தளபதி கொல்லப்பட்டார்

image

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடந்த பயங்கர வெடிகுண்டுத் தாக்குதலில், அந்நாட்டின் கதிர்வீச்சு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் பாதுகாப்பு படைத்தலைவர் இகோர் கிரிலோவ் பலியானார். ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் உதவியாளர் ஒருவரும் உயிரிழந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் SBU உளவு அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News September 6, 2025

GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

image

GST வரி குறைப்​பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்​திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்​டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருந்த மோடி அரசு, தற்​போது விழித்​துக்​கொண்டு ஜிஎஸ்​டியை மறுசீரமைத்​துள்​ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.

News September 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

News September 6, 2025

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

image

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!