News December 17, 2024
விஷ சாராய வழக்கு: ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். இது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Similar News
News September 6, 2025
CSK நிச்சயம் கம்பேக் கொடுக்கும்: கேப்டன் ருதுராஜ்

காயத்தால் 2025 IPL தொடரில் இருந்து வெளியேறிய பிறகு களமிறங்கிய மாற்று வீரர்கள் உடன், தானும் இணைந்து 2026 சீசனில் வெற்றி பெறுவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். தோனியின் ஆதரவுடன் இது நிச்சயம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு CSK தள்ளப்பட்ட நிலையில், ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் உடன் சென்னை அணி கம்பேக் கொடுக்கும் என தோனி கூறியிருந்தார்.
News September 6, 2025
GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

GST வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு, தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.