News December 17, 2024
ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக TN சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. அத்தொகுதி MLA EVKS இளங்கோவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தால், தொகுதி காலியானதாக TN சட்டமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இதையடுத்து, 6 மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 2025 ஜன., பிப்., மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Similar News
News September 6, 2025
GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

GST வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு, தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.