News March 23, 2024
அரசு பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம்

அந்தியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று டைட்டன் நிறுவனத்தால் படித்துக்கொண்டே ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்தியூர் அரசுப் பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள், அதற்கான நியமன ஆணையை டைட்டன் கம்பெனியின் மனிதவள நிர்வாகி(HR) .ராஜ்குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமை தாங்கினார்
Similar News
News January 25, 2026
கோபி அருகே விபத்து: ஒருவர் வலி!

கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 40). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக கோபியை அடுத்த சவுண்டப்பூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 24, 2026
ஈரோடு: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ஷேர் பண்ணுங்க)
News January 24, 2026
ஈரோடு: 12th, டிப்ளமோ போதும்.. ரூ.44,000 சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <


