News December 17, 2024
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 263 மனு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 263 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 15, 2025
திருவாரூரில் அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

அன்பு கரங்கள் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ தலைவர் நா.இளையராஜா, சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
News September 15, 2025
திருவாரூர் மக்களே நில விபரங்களை அறிய எளிய வழி!

திருவாரூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 15, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் பாடை ஊர்வலம்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அத்திக்கடை, பாமணி கிராமங்களில் மக்கள் சந்திக்கக் கூடிய அடிப்படை பிரச்சனைகளை அரசுக்கு அடையாளப்படுத்தும் விதமாக பாடை ஊர்வல போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் இன்று (செப்.15) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.