News December 17, 2024
ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா?

பிரபாஸ் நடிக்கும் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘த ராஜா சாப்’ என்ற படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார். ஹாரர் காமெடி கதைக்களத்தில், இந்த படம் உருவாகிவரும் நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு பாடலில் நயன்தாரா நடனமாட உள்ளதாக தெரிகிறது. நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் ஹைதராபாத்தில் எடுக்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
தமிழகத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது: குஷ்பு

தமிழகத்தில் குடும்ப அரசியல் மட்டுமே நடப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாராட்டு விழாவில் CM குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததாகவும், ஆனால் அவரது இசையில் பாடிய பெண்களில் ஒருவருக்கு கூட நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துள்ளதாக குஷ்பு கூறியுள்ளார்.
News September 16, 2025
பெண்களே Gemini AI-ல் போட்டோ Upload பண்றீங்களா?உஷார்!

Gemini AI-ன் போட்டோக்கள் தான் தற்போதைய டிரெண்ட். ஆனால், இளம்பெண் ஒருவர் போட்டோக்களை Upload செய்யும் போது, கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளார். Gemini AI-ல் அவர் கை மூடிய சுடிதார் அணிந்த போட்டோவை Upload செய்த போதும், அவர் கையிலுள்ள மச்சம் Gemini AI உருவாக்கிய போட்டோவில் சரியாக இடம்பிடித்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பி, இது தன்னை அச்சமடைய செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,280-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ₹82,000-ஐ கடந்தது இதுவே முதல்முறை. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.