News December 16, 2024
ஆவின் பால்: அரசு புது அறிவிப்பு

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை முறையில் சில பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரவேற்பை பொறுத்து விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கிரீன் மேஜிக் பிளஸ் பால் விலை குறித்தும், அளவு குறைக்கப்பட்டு இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், அளவு குறைக்கப்படவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
டிரம்ப் உயிருடன் உள்ளார்: வெள்ளை மாளிகை விளக்கம்

X-தளத்தில் <<17563319>>TRUMP IS DEAD<<>> என்ற ஹேஷ்டேக் இன்று உலகளவில் டிரெண்டானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் மாளிகை, டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும், விர்ஜீனியாவில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு போட்டோவையும் பகிர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே டிரம்ப் வெளியில் வராததால், அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டுவிட்டனர்.
News August 31, 2025
சீமானின் அடுத்த மாநாடு இதுதான்..!

சீமான் அடுத்ததாக மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டில் பேசிய அவர், தனது ஆட்சியில் மரத்தை வெட்டினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், ஒரு சிறுவன் 10 மரங்களை நட்டு வளர்த்தால் தேர்வில் 10 மதிப்பெண்களும், 100 மரங்களை நட்டு வளர்த்தால் சிறந்த தமிழ் தேசிய குடிமகன் விருதும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 31, 2025
ஜெர்ஸி ஸ்பான்ஸர்ஷிப்பிற்கு ₹452 கோடி விலை

இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸர்ஷிப்பிற்கு BCCI ₹452 கோடி விலை நிர்ணயித்துள்ளது. 2025 முதல் 2028 வரை 3 ஆண்டுகாலத்திற்கு இந்த ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் போடப்படும் எனவும், 140 போட்டிகள் இதில் அடங்கும் என்றும் BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலானதை தொடர்ந்து, ஜெர்ஸி ஸ்பான்ஸராக இருந்த Dream 11 முன்கூட்டியே வெளியேறியது.