News December 16, 2024

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: பாஜக பக்கம் சாய்ந்த மாயாவதி

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு மாயாவதி திடீர் ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் அரசின் செலவுகள் குறையும், மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ள அவர், அரசியல் கருத்து வேறுபாடின்றி இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். BSPஇன் திடீர் மனமாற்றம் BJP அரசுக்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஏற்கெனவே அதிமுக தங்களது ஆதரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 16, 2025

ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

image

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அதை இன்று ஒருநாள் மட்டும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. நேற்று கடைசி நாள் என்பதால், ஒரேநாளில் அதிகமானோர் தாக்கல் செய்ய முனைப்பு காட்டினர். இதனால், வருமான வரித்துறையின் இணையதளம் முடங்கியது. அதன் காரணமாக, இன்று ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 7.3 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளனர்.

News September 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

News September 16, 2025

ASIA CUP: தொடரை விட்டே வெளியேறும் PAK?

image

கடந்த IND vs PAK போட்டி டாஸின் போது, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் தலையீடு அதிகமாக இருந்ததாக ICC-க்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. டாஸின் போது சூர்யா கைகொடுக்க மாட்டார் என தங்கள் கேப்டன் சல்மானிடம் கூறியதாகவும், இது தொடர்பாக இரு கேப்டன்களிடம் தனித்தனியாக அவர் பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதனால் அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!