News December 16, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும்

image

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தென் மாவட்டங்களை உலுக்கிய கனமழையால் நெல்லை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிலையங்கள் செயல்படும் என்று கூறியிருக்கும் ஆட்சியர், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

Similar News

News August 30, 2025

டிரம்ப் விதித்த இறக்குமதி வரி சட்டவிரோதம்: USA கோர்ட்

image

டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என USA கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. IEEPA பெயரில் பார்லிமென்ட்டின் அனுமதியின்றி ஒருதலைபட்சமாக இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, தான் விதித்த அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும், வரி நீக்கப்பட்டால் அது நாட்டிற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் எனவும் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

News August 30, 2025

மூலிகை: மூட்டுவலியை நீக்கும் சித்தரத்தை!

image

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤சித்தரத்தையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும்.
➤மூச்சுத்திணறலுக்கு அதிமதுரம், திப்பிலியை சித்தரத்தையை சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.
➤உலர்ந்த சித்தரத்தை & அமுக்கரா கிழங்கை தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும்.
➤சித்தரத்தையை உலர்த்தி, நீரில் கொதிக்கவைத்து பருகினால், வறட்டு இருமல் தணியும். SHARE IT.

News August 30, 2025

நடிகர் விஜய்யை குத்தணும்.. வெடித்த சர்ச்சை

image

விஜய்யை ‘அவன் இவன்’ என்று சர்ச்சையாக பேசிய நடிகர் <<17558934>>ரஞ்சித்<<>>, மிரட்டலும் விடுத்துள்ளார். விஜய்யின் பேச்சை கேட்டு எனக்கு வெறி வருகிறது என்றும், எனக்கு வர்ற கோபத்துக்கு விஜய்யை ஓங்கி ஒரு குத்து குத்தணும்னு தோணுது என்றும் பேசியுள்ளார். ரஞ்சித் பேச்சு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெகவினர் கொந்தளிக்கின்றனர்.

error: Content is protected !!