News December 16, 2024
இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு GOOD NEWS

தமிழகத்தில் டிரெக்கிங் செல்வதற்கான கட்டணம் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை உள்பட தமிழகத்தில் மொத்தம் 40 மலையேற்ற வழித்தடங்கள் உள்ளன. எளிது, மிதமானது, கடினமானது என 3 வகைகளாக டிரெக்கிங் பிரிக்கப்பட்டு அதற்கான கட்டணமாக ₹599 முதல் ₹5,099 வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. <<-1>>இந்த<<>> இணையதளத்தில் விவரம் அறியலாம்.
Similar News
News August 30, 2025
RECIPE: வயசுப் பெண்களுக்கு முக்கியமான உளுந்தங்களி!

◆உளுந்தங்களியில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் நிறைந்திருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
➥தண்ணீரில் அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
➥அதை நன்கு கொதிக்க வைத்து, கருப்பட்டி or வெல்லம், உளுந்து மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
➥அதில், ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் சுவையான உளுந்தங்களி ரெடி. SHARE IT.
News August 30, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் ₹3000 உயர்வு … புதிய உச்சம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹134-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,34,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ₹3520 (2 நாளில் மட்டும் ₹1720) அதிகரித்து இன்று ₹76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 30, 2025
ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது: அரசு

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவர். அதேநேரம், விசாரணை முடிவுற்ற பிறகே பணப் பலன்களை பெற முடியும் என்றும் கூறியுள்ளது.