News December 16, 2024
WPL ஏலத்தில் கலக்கிய வீராங்கனைகள்

WPL 2025 தொடருக்கான ஏலத்தில் 29 சர்வதேச வீராங்கனைகள் உள்பட 120 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிம்ரன் ஷெய்க் அதிகபட்சமாக ரூ.1.9 கோடிக்கு Gujarat Giants அணியால் வாங்கப்பட்டார். தமிழக வீராங்கனை கமலி ரூ.1.6 கோடி (MI), வெ.இண்டீஸ் வீரங்கனை டீண்ட்ரா டோட்டின் ரூ.1.7 கோடி (GG), பிரேமா ரேவந்த் ரூ.1.2 கோடி (RCB) தொகைக்கும் வாங்கப்பட்டனர். ஏலம் நிறைவடைந்ததால் விரைவில் அணிகளின் முழு விவரம் வெளியாகும்.
Similar News
News August 30, 2025
அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் இணையை 21-12, 21-19 என்ற கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
News August 30, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 30)

* 1835 – ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது
*1954 – தமிழக அரசியல் பிரபலம் TKS இளங்கோவன்(DMK) பிறந்தநாள் 1954
* 1957 – பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
* 1963 – நடிகர் ஆனந்த் பாபு பிறந்தநாள் (1963)
*2001 – மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்
News August 30, 2025
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு குவியும் தங்கம்

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 52 தங்கம் உள்பட 103 பதக்கங்கள் குவித்துள்ளது. நேற்று நடத்த 25மீ செண்டர் டயர் பிஸ்டல் பந்தயத்தில் குர்பிரீத், ராஜ்கன்வார், அங்குர் கோயல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1733 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் 107 புள்ளிகள் எடுத்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசமாக்கினார்.