News December 15, 2024

3 வயதிலேயே இசையை தொடங்கிய ஜாகிர்

image

ஜாகிர் உசேனின் தந்தையின் பிரபல இசைக் கலைஞராக இருந்தவர். 3 வயதிலேயே தந்தையிடம் மிருதங்கம் கற்றுக்கொள்ள தொடங்கிய ஜாகிர், 12 வயதிலேயே பெரிய இந்துஸ்தானி மேதைகளுக்கு தபேலா வாசிக்க தொடங்கினார். பீட்டில்ஸ் உள்பட பிரபல மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த ஆண்டில் 66வது கிராமி விருதுகளில், ஒரே இரவில் 3 விருதுகள் வென்று வரலாறு படைத்தார்.

Similar News

News August 5, 2025

BREAKING: நாளை மறுநாள் முதல் +1, +2 அசல் சான்றிதழ்

image

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆகஸ்ட் 7ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

இரு அவைகளுக்கு 2 மணிவரை ஒத்திவைப்பு

image

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும்போது அவையின் மையத்திற்கு CISF படையினர் வந்ததற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.

News August 5, 2025

அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித்ஷா

image

மத்திய உள்துறை அமைச்சராக அதிக நாள்கள் இருந்தவர் என்ற பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார். 2,256 நாள்கள் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை, அமித்ஷா(2,258) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளார். அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்த போதே ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாஜகவின் தேசிய தலைவர், குஜராத்தின் உள்துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளையும் அமித்ஷா வகித்துள்ளார்.

error: Content is protected !!