News December 15, 2024
ரோகித் இதை செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்

டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களம் இறங்கிய உடன் ரோகித் சர்மா, பும்ராவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், BGT பிரிஸ்பேன் டெஸ்டில் ஹெட் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுதே இந்தியா சிறப்பாக செய்திருக்கலாம். பும்ரா, ஹெட்டுக்கு எதிராக தொடக்கத்திலேயே சில ஓவர்கள் பந்துவீசி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்றார்.
Similar News
News August 30, 2025
ரூபாய் மதிப்பு முதல் முறையாக ₹88ஆக வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன் தினம் ₹11 காசுகள் உயர்ந்து, ₹87.58 ஆக முடிவடைந்தது. ஆனால், நேற்று இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு வெளியேறியது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு ஒரேடியாக ₹61 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ₹88 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
News August 30, 2025
அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் இணையை 21-12, 21-19 என்ற கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
News August 30, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 30)

* 1835 – ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது
*1954 – தமிழக அரசியல் பிரபலம் TKS இளங்கோவன்(DMK) பிறந்தநாள் 1954
* 1957 – பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
* 1963 – நடிகர் ஆனந்த் பாபு பிறந்தநாள் (1963)
*2001 – மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்