News December 15, 2024
திமுக ஆட்சியை தூக்கி எறிய காத்திருக்கும் மக்கள்: வானதி

திமுக அமைச்சர்கள் மகாராஜா மனப்பான்மையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், “திமுக அரசு பல துறைகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய அரசை எதிர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அமைச்சர்கள் செல்லும்போது மக்கள் வெளிப்படுத்தும் கோபம் வெறும் 5% மட்டுமே. இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.
Similar News
News March 10, 2026
ஒரு தொலைபேசியில் PM மோடி போரை நிறுத்தி விடுவார்: UAE

வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியாவுக்கான UAE தூதர் ஹுசைன் ஹர்சன் மிர்சா தெரிவித்துள்ளார். பத்து நாட்களுக்கு முன்பு PM மோடி இஸ்ரேலில் இருந்தார்; ஈரானின் எண்ணெயை அதிகம் வாங்கும் அவர் மிக நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான பிரச்சனையை, ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் PM மோடி தீர்த்து வைத்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
Uber, Ola, Rapido-க்கு தடை!

மகாராஷ்டிராவில் Ola, Uber, Rapido ஆகியவற்றின் பைக் டாக்சி சேவைகளுக்கான தற்காலிக லைசென்ஸ்களை அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அம்மாநிலத்தில் இந்த நிறுவனங்கள் E-bike டாக்சிகளை மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் லைசென்ஸ் பெற்றுவிட்டு, இந்நிறுவனங்கள் E-bike களுக்கு பதிலாக பெட்ரோல் பைக்குகளை இயக்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
News March 10, 2026
த்ரிஷாவின் குற்றச்சாட்டு 100% பொய்: பார்த்திபன்

<<19332195>>தனது பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்<<>> தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக வீடியோ வெளியிட்டுள்ளார் பார்த்திபன். குற்றம் சுமத்துகிற மாதிரி த்ரிஷாவின் போட்டோவை போட்டு தான் பேச ஆசைப்பட்டதாக கூறுவது 100% பொய்; யாரிடமும் காசு வாங்கிவிட்டு அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்றார். தொகுப்பாளர் ‘குந்தவை’ என கூறியதும், அது ஒரு வார்த்தை ஜாலமாக தோன்றியதால் தான் அப்படி பேசியதாகவும் கூறியுள்ளார்.


