News December 15, 2024

ஐயா ராமதாஸை கொச்சைப்படுத்தாதீங்க ப்ளீஸ்..

image

ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், ஐயா ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவரை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். எந்த சமுதாயத்துக்கு பிரச்னை என்றாலும், முதலில் வந்து நிற்பது அவர்தான். ராமதாஸ் வந்த பின்னரே, வட தமிழகம் அமைதியாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் வரை தினமும் வட தமிழகத்தில் கலவரம் நடந்தது எனக் கூறினார்.

Similar News

News March 7, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

ஈரான் – USA, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய அடுத்த நாளே தங்கம் விலை சவரனுக்கு ₹7,000 அதிகரித்தது. அதன்பிறகு, தலைகீழ் மாற்றமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் ₹6,520 குறைந்திருப்பது நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,000-க்கு கீழே சென்றுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2026

இனி மது வாங்க பெங்களூரு செல்வது வேஸ்ட்!

image

கர்நாடக அரசு இதுவரை மதுபான விலையை நிர்ணயம் செய்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் முதல் இக்கட்டுப்பாடு முழுவதுமாக நீக்கப்படுகிறது. இனி அரசுக்கு பதிலாக மது விற்பனை நிலையங்களே விலையை தீர்மானிக்கலாம். மேலும், வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்துள்ள அரசு, மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவுக்கு ஏற்ப வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மதுவிலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுபட வாய்ப்புள்ளது.

News March 7, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து தங்கமணி விலகுகிறாரா?

image

EPS – தங்கமணி இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி உடனான மோதல்போக்கு காரணமாகவே, EPS தனது நாமக்கல் பரப்புரையை தாமதமாக நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தங்கமணி அதிருப்தியில் இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கடந்தாண்டே செய்தி வெளியானது. ஆனால், இதனை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

error: Content is protected !!