News December 15, 2024

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய பிரபலங்கள்

image

2024ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து வாங்குவதில் அதிக முதலீடு செய்த பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ₹76.5 கோடி முதலீட்டுடன் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக ஷாகித் கபூர் ₹58.6 கோடி முதலீடு செய்துள்ளார். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன் ₹30.6 கோடி, அபிஷேக் பச்சன் ₹30.2 கோடி, கே.எல்.ராகு ₹20 கோடி என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர்.

Similar News

News March 16, 2026

ஜூஸுக்கு GAS CRISIS CHARGE.. வைரலாகும் பில்

image

லெமன் ஜூஸ் குடிச்சதுக்கு பில்லில் கேஸ் கட்டணம் வசூலித்த சம்பவம் இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. பெங்களூரு உணவகத்தின் பில் இணையத்தில் வைரலாக, ஜூஸுக்கு கேஸா என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் வாடிக்கையாளர்களின் பில்லில் கூடுதலாக கேஸ் கட்டணத்தை சேர்த்து வருகின்றனர். ஆனால், இந்த உணவகம் ஒருபடி மேலே சென்றுவிட்டது.

News March 16, 2026

தமிழக தேர்தல்: விஜய் திடீர் முடிவு

image

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடத்துவது தொடர்பாக அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் 25 நாள்கள் பரப்புரை மேற்கொள்வது குறித்தும் விஜய் ஆலோசித்துள்ளாராம். விரைவில் அவரது பரப்புரை திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 16, 2026

கில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டனா?

image

BCCI விழாவில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் என்று ரோஹித்துக்கு பதில் கில்லை குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது. திரையில் ‘Winning Captain, ICC Champions Trophy 2025’ என்பதில் கில் படம் வந்ததால் ரோஹித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சர்ச்சையை தொடர்ந்து SM-ல் இந்த பகுதியை மட்டும் BCCI நீக்கியுள்ளது. டெக்னிக்கல் பிரச்னை என்றாலும் ரோஹித் ரசிகர்களை இது ரொம்பவே காயப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!