News December 15, 2024

பால் விலை உயர்வு நூதன மோசடி: டிடிவி கண்டனம்

image

ஆவின் புதிதாக அறிமுகப்படுத்திய மேஜிக் பிளஸ் பால் பாக்கெட் நூதன மோசடி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 500 மி.லி பால் பாக்கெட் அளவை 450 மி.லி ஆக குறைத்து சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி விலையை ரூ.44-லிருந்து ரூ.55 ஆக உயர்த்தியதாகவும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால், பால் பொருட்களின் விலையை ஆண்டுக்கு 2 முறை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News August 30, 2025

எதிர்பார்ப்பை மிஞ்சிய இந்தியாவின் GDP

image

2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8% என தரவுகள் தெரிவிக்கின்றன. ஹோட்டல், நிதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்டவை இந்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணங்களாம். RBI கணிப்பை விட GDP அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக 2024 ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் GDP 8.4% இருந்தது. அதன்பின் ஐந்து காலாண்டிற்கு பிறகு தற்போது 7.8% அதிகரித்துள்ளது.

News August 30, 2025

‘ராட்சசன்’ போல் இருக்குமா ‘ஆர்யன்’?

image

த்ரில்லர் படங்களில் பலரின் பேவரைட் ‘ராட்சசன்’ என்று சொல்லலாம். மீண்டும் அதேபோன்ற படத்தை விஷ்ணு விஷாலிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதேபோல் ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையான ஆர்யனில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். ‘ஆர்யன்’ படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா விஷ்ணு விஷால்?

News August 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 443
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

error: Content is protected !!