News December 15, 2024
தூத்துக்குடி மீனவர்களுக்கு நாளை முக்கிய செய்தி

தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது வானிலை இன்று முதல் சீரான நிலமைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மீன்பிடி விசைப்படகுகள் நாளை 16ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
Similar News
News August 31, 2025
தூத்துக்குடியில் தமிழ் தெரிஞ்சா போதும்.. ரூ.58,100 சம்பளம்!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதிகளில் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும். தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் <
News August 31, 2025
ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகப்படும் சூழ்நிலைகளில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 31, 2025
அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜமுனாராணி தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினார்கள் கலந்து கொண்டனர். இதில் 121 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.