News December 15, 2024
பாலிவுட் படங்களுக்கு கிளாமர் தான் முக்கியம்: கங்கனா

பாலிவுட் சினிமாவை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். புஷ்பா உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுவதற்கு, அது மக்களின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தியதாக இருப்பதுதான் காரணம் எனவும், பாலிவுட் படங்கள் கிளாமர் மற்றும் போலித்தனமான கதையம்சங்களில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தி படங்களை காட்டிலும், தென்னிந்திய படங்களே பாலிவுட்டில் அதிக வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
நாமக்கல்: 6 தொகுதிகளில் 132 பேர் போட்டி!

நாமக்கல் மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 12 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில், தற்போது 132 பேர் களத்தில் உள்ளனர். இதில் பரமத்தி வேலூரில் அதிகபட்சமாக 31 பேரும், சேந்தமங்கலத்தில் குறைந்தபட்சமாக 12 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
News April 10, 2026
Sports 360: இன்று களம்காண்கிறது RR vs RCB

➤KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றிக்கு வித்திட்ட 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ➤IPL: RR மற்றும் RCB இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன ➤டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக GT கேப்டன் சுப்மன் கில்லுக்கு ₹12 லட்சம் அபராதம் ➤ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்
News April 10, 2026
58 தொகுதிகளையும் டார்கெட் செய்த EPS

ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலினும், ஆட்சியை கைப்பற்ற இபிஎஸ்ஸும் தீவிரமாக பரப்புரை செய்கின்றனர். இந்நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் தனிச் சின்னங்களில் போட்டியிடும் 58 தொகுதிகளை EPS டார்கெட் செய்துள்ளாராம். திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் (காங்., விசிக) இணக்கம் இல்லாத நிலை, அதிருப்தி கூட்டணியில் கெமிஸ்ட்ரில் இல்லாதது ஆகிய சூழல்களை பயன்படுத்தி அத்தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறாராம்.


