News December 15, 2024
நெல்லை – ஷாலிமார் ரயிலை நீட்டிக்க வலியுறுத்தல்

பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர் வட்டார ரயில் பயணிகள் பலனடையும் வகையில் நெல்லை – ஷாலிமார் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் வள்ளியூர் மார்க்கமாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோல் மதுரை கன்னியாகுமரி இடையே நெல்லை வழியாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 18, 2025
நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.

மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.