News December 15, 2024

திருக்குறள் வினாடி வினா போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

image

குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள 9361613548, 8667573086 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் பரிசு ரூ. 2 லட்சம், 2ஆம் பரிசு 1.5 லட்சம், 3ஆம் பரிசு 1 லட்சம்.

Similar News

News March 11, 2026

115 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

image

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 115 மையங்களில் 11,966 மாணவர்களும், 12,526 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 666 பேரும் என மொத்தம் 25,158 மாணவர்கள் எழுதுகின்றனர். மேலும் தேர்வினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News March 11, 2026

விருதுநகர்: EX ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

image

விருதுநகர் அருகே வரலொட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி(57). இவர் காரியாபட்டி சாலையில் வில்லிபத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

News March 10, 2026

விருதுநகர்: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

image

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!