News December 15, 2024

மகளிர் விடியல் பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

image

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் விடியல் பயண பேருந்துகளை இன்று (டிச.15) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ், பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 22, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 63,342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரி 73,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகைக் கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 22, 2025

அரசு ஐடிஐக்களில் சேர ஆக.31 கடைசி நாள்!

image

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு அரசு ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை பழங்குடியினர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்களில் 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஆக.31- ஆம் தேதி கடைசி நாளாகும். மாதந்தோறும் ரூபாய் 750 உதவித்தொகை, காலணி, சைக்கிள், சீருடை, வரைப்படக் கருவி, பேருந்து பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

News August 22, 2025

கால்நடைப் பராமரிப்பு கடன் ரூபாய் 67.46 கோடியைத் தாண்டியது

image

சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 12,342 விவசாயிகளுக்கு ரூபாய் 67.46 கோடி கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடனாக கறவை மாடு ஒன்று பராமரிக்க ரூபாய் 14,000-ம், அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூபாய் 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது, எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!