News December 15, 2024
இயக்குநராகும் நடிகர் சூரி..!

நடிகர் சூரி விரைவில் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அப்பா முத்துச்சாமி மற்றும் அம்மா சேங்கையரசியின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை கூறும்போது சாதாரணமாக தெரியும், ஆனால், ஷேர் பண்ணுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 6 பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பெற்ற கஷ்டத்தை படமாக்க வேண்டும் என்பது சூரியின் நீண்டநாள் கனவு.
Similar News
News March 22, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்.. திடீர் திருப்பம்

புதுச்சேரி <<19448036>>அதிமுக வேட்பாளர்களை<<>> EPS இன்று அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக புதுச்சேரி அதிமுக துணை செயலாளரும் Ex MLA-வுமான வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். மேலும், CM ரங்கசாமி முன்னிலையில் தன்னை NR காங்கிரஸில் இணைத்துக் கொண்டுள்ளார்.
News March 22, 2026
வாக்காளர்களுக்கு நற்செய்தி.. EC புதிய அறிவிப்பு

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வசதி, நிழற்குடை, கழிப்பறை, வாக்காளர்களுக்கு பெஞ்ச் வசதி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டோவுடன் கூடிய வேட்பாளர்களின் போஸ்டர்களை வாக்குச்சாவடியில் ஒட்டுவதுடன், வாக்காளர் உதவி பூத், செல்போன் டெபாசிட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News March 22, 2026
பொடுகு தொல்லைக்கு ஈசி தீர்வு இருக்கு.. NOTE THIS

பொடுகு தொல்லை அதிகமாக இருக்கிறதா? இதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்குமே.. கவலை வேண்டாம். இதனை தீர்க்க, சிறிதளவு எலுமிச்சையும் தேனும் போதும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையும். இதை வாரத்திற்கு ஒருமுறை Try பண்ணுங்க. SHARE.


