News December 15, 2024
BGT தொடர்: 10 பந்தில் ₹5 கோடி இழந்த ஆஸி.

3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ரத்தானதால் ஆஸி. அணி நிர்வாகத்திற்கு இந்திய மதிப்பீட்டில் சுமார் ₹5.4 கோடியை இழந்துள்ளது. என்னவென்றால், டெஸ்ட் போட்டி. ஒரு நாளில் ரத்தாகிறது என்றால், 15 ஓவர்கள் வீசிவிட்டால், டிக்கெட் கட்டணத்தை திரும்ப கொடுக்க தேவையில்லை. ஆனால், முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 13.2 ஓவர்களே வீசப்பட்டது. வெறும் 10 பாலில் ஆஸி. கிரிக்கெட் நிர்வாகம் இவ்வளவு பெரிய தொகையை இழந்துள்ளது.
Similar News
News March 5, 2026
தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
News March 5, 2026
இந்தியா பைனலுக்கு செல்லாது: பாகிஸ்தான் வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என பாக்., Ex வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார். இத்தொடரில் இங்கிலாந்து அணி கடினமான சூழ்நிலைகளை கண்டுள்ளது என்றும், இந்தியாவை தோற்கடிக்க ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
தினமும் பாலியல் மிரட்டல் வருகிறது: ஆயிஷா கான்

தன் உடலை பற்றிய கமெண்ட்களே எப்போதும் வருவதால் ஒரு போஸ்ட் போடுவதற்கு கூட யோசிக்கிறேன் என நடிகை ஆயிஷா கான் தெரிவித்துள்ளார். ’துரந்தர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளார். எந்த உடை அணிந்தாலும் தவறு என்கிறார்கள்; தான் உடுத்தும் உடையால் யாருக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


