News March 23, 2024
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் ’12 டி’ ஐ பூர்த்தி செய்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் மார்ச் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News August 17, 2025
திருவள்ளூர்: உள்ளூர்லயே வேலை கிடைக்க இத பண்ணுங்க

உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை <
News August 17, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (17/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 17, 2025
நெகிழி இல்லா மாவட்டம் விழிப்புணர்வு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நெகிழி இல்லா மாவட்டம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வளைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் உள்ளார்.